கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாரத சக்தி மகாகாவியத்தில் இடம் பெற்ற குறட்பாக்களின் தொகுப்பு நுால். கடவுளியல், உலகியல், அறவியல், அறிவியல், அன்பியல், இல்லறவியல், குலவியல், தொழிலியல், அருளரசியல், யோகவியல், சித்தியல் என்ற தலைப்புகளில் உள்ளன.
பாக்களுக்கு பதவுரை, விளக்கவுரை தரப்பட்டுள்ளது. அதிகார விளக்கம் விரிவாக எழுதப்பட்டு உள்ளது. ஓங்காரமாய், ஒளியாய், உயிர்க்கு உயிரானவன் என வள்ளுவர் கடவுளை முன் நிறுத்தியுள்ளார். அற இன்பம் வாழ்வின் அழகின்பம், பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும், கலைகளின் கவலைகள் போக்கி பயன் தரும் என்கிறார். ஆண் – பெண் வசப்பட்டு செய்யும் காதல் கல்யாணமே சிறந்தது என்று உரைக்கும் நுால்.
-– முனைவர் மா.கி.ரமணன்