பகவான் ஸ்ரீ சாய்பாபாவின் அவதார பெருமைகளையும், அடியார்கள் துயர் தீர்த்த விதங்களையும் விவரிக்கும் நுால்.
சீரடி திருநீறான உதியை வீட்டில் வைத்திருந்து, நோய் வரும் நேரம் பாபாவை வணங்கி பூசிக் கொண்டால் குணமாகிவிடும். இது அனுபவ உண்மை. பந்தராவில் ஒரு பக்தரின் மகளுக்கு பிளேக் நோய் கண்டது. வீட்டில் உதி இல்லை. பக்கத்து வீட்டாரிடம் கேட்க அங்கும் இல்லா சமயம், பாபாவை எண்ணி மண்ணை கொடுத்து அனுப்ப நோயிலிருந்து மீண்டார். உண்மை அறிந்து பாபாவின் கருணையை நினைத்து உருகியது அருமை.
பல்லி சொல்லும் பலனை பற்றி பாபா சொன்ன கருத்து அருமை. துணைப்பல்லி வெகு துாரத்தில் இருந்து வந்ததும் அருள் தான். சாய்பாபா பக்தர்களுக்கு விருந்து.
– சீத்தலைச் சாத்தன்