இந்தியாவை நிர்வகிக்கும் உயர் அதிகாரிகளின் பணியை எடுத்துரைக்கும் நுால்.
சிறந்த அகில இந்திய நிர்வாகம் இல்லை என்றால் ஒன்றுபட்ட இந்தியா இருக்காது. யூனியன் என்பது மறைந்து போய்விடும். இதை உணராவிட்டால், அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற இயலாது.
அரசியலமைப்பு படி பல்வேறு பணிகளை கட்டமைத்து தேசத்தை ஒன்றாக்குவதை விளக்குகிறது. இதை செயலாக்கும் இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் இல்லாவிட்டால் வெறும் கூச்சலும், குழப்பமுமே மிஞ்சும்.
ஐ.ஏ.எஸ்., பணி உருவான வரலாறு, அதன் நோக்கம், மாற்றங்களை தெரிவிக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தப் பணி, அரசியல் நிகழ்வுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் தெளிவாக விளக்குகிறது.
-– இளங்கோவன்