தற்போது மியான்மர் என அழைக்கப்படும் பழைய பர்மாவில் வாய்மொழியாக பேசப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. சுவை குன்றாமல் தொகுக்கப்பட்டுள்ளன.
வியப்பு ஏற்படுத்தும் கதைகள், விலங்குகளுடன் தொடர்புடையவை; மனித தொடர்புகள் வெளிப்படுபவை என, வகைப்படுத்தி தொகுக்கப்பட்டு உள்ளது.
புத்திசாலி மிருகங்கள், அரக்கர்கள் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. பர்மியர்களின் தொன்மை வாழ்வில் இருந்த நம்பிக்கைகளை மையமாக உடையது. சிறுவர் – சிறுமியருக்கு உத்வேகமூட்டும் வகையில் எளிய நடையில் உள்ளது. பர்மிய நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்