பொறுப்பை ஒப்படைத்தவனே சுருட்டியது பற்றி சிந்திக்க வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளுக்கு இடையே வரும் வர்ணனை மிகவும் சிறப்பாக உள்ளது.
விளக்கு கம்பங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றன. ஒரே வாரத்தில் வாழ்க்கையில் சுனாமி போல் மாற்றம். ‘உண்மையான பாசம், இயற்கை உரமாய் குடும்பத்து தோட்டத்தில்’ என நிகழ்ச்சிக்கும், காலத்துக்கும் பொருத்தமான வர்ணனைகள் பல உள்ளன.
நவ திருப்பதி, திவ்ய தேசங்கள் பற்றிய விளக்கங்களும், தரிசனம் முடித்து திரும்பும் போது நல்ல செய்திகள் கிடைப்பதும் உண்மையில் மகிமையை சொல்கிறது.
தாய்க்கும், மனைவிக்கும் இடையே போர்க்கள நிலைமையை, பாசக் களமாக்கிய பேத்தியின் கதை புதுமை. வித்தியாசமான சிறுகதை நுால்.
– சீத்தலைச்சாத்தன்