புத்தரின் வாழ்க்கையையும் போதனைகளையும் விளக்கம், வினாக்கள் குறிப்புகளுடன் தரும் நுால்.
பவுத்த இலக்கியங்கள் சீனா, இலங்கை, தாய்லாந்து நாடுகளில் பரவின. அவற்றை மொழிபெயர்த்தோர் தமிழ்த் தேரர்கள். புத்தரின் வாழ்க்கை, ஞானம் பெற்ற நிலை, போதனைகள், சமயம் பரப்பியது, பரிநிப்பானம், வாய்மை, கம்மா வினைக் கோட்பாடு, பவுத்தம் பரப்பிய மன்னர் அசோகர் என, 20 தலைப்புகளில் கருத்துகள் உள்ளன.
‘கருணையும் கொடையும் கொள்’ என்ற போதனையை மேன்மை மிக்கதாகக் காட்டுகிறது. புத்தம் பற்றி பேசும் ஞானப் புத்தகம்.
– முனைவர் மா.கி.ரமணன்