செண்டைமேளக் கலைஞரின் சுயசரிதை நுால். சந்தித்த மனிதர்கள், கண்டுணர்ந்த நெறிகள், சென்று வந்த இடங்களில் கிடைத்த அவமரியாதை, களவழி வந்த வேதனைகள் வர்ணப்பூச்சு இன்றி பதிவாகியுள்ளது.
செண்டைமேளக் கலை அறிமுகத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, திருவிதாங்கூர் பகுதியில் அந்த கலை பரவிய சுவடுகளை விவரிக்கிறது. இளமைப் பருவத்தில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கலை மீதான ஈர்ப்பை காட்சிப் பூர்வமாக விவரிக்கிறது.
தொடர்ந்து கற்ற விதம், படிப்படியாக தேர்வதற்கு எடுத்த முயற்சிகள் இலக்கிய சுவையுடன் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயலிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அணுகியதை சுவடு பிசகாது விவரிக்கிறது. எளிய மொழி நடையில் விறுவிறுப்பு குன்றாமல் எழுதப்பட்டுள்ள வித்தியாசமான சுயசரிதை நுால்.
– மதி