பள்ளி பெண் நிர்வாகி – ஆசிரியர் இடையே நடைபெறும் மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல்.
பெண் நிர்வாகியின் மனதில் இடம் பிடிக்க ஆசிரியர் முயற்சிக்கிறார். பழைய காதலி நினைவுடன் அணுக முயற்சிக்கிறார். அதைத் தவிர்க்க முடியாமல் பெண் நிர்வாகி போராடுகிறார். மனிதாபிமானம், பெண்ணுக்கு உரிய பண்பாடு இடையே மனப்போராட்டம் நடத்துவது த்ரில்லாக உள்ளது.
மனிதாபிமானம், காதல் இனிமை, பெண்களின் குணம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. கதைக்காக கூட பண்பாட்டையும், நெறிமுறைகளையும் மீறுவது தர்மம் அல்ல என்ற உயரிய சிந்தனையோடு எழுதப்பட்டு உள்ளது. உண்மை கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
– இளங்கோவன்