அறிவியல், அரசியல், வரலாறு மற்றும் மர்மக் கூறுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை நுால். வசீகரிக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.
நாவல் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தப்பாகத் தப்பிய இலக்கு என துவங்கி, முதல் பகுதி சிக்கல் மிக்க கதைக்கு களம் அமைக்கிறது. முன்னாள் அபூர்வங்கள், ரகசிய நடவடிக்கைகள், ஏழுமலையான் என, அடுத்தடுத்த பகுதிகளை ஈர்க்கும் வண்ணம் கற்பனையுடன் அமைந்துள்ளன.
அறிவியல் அடிப்படையிலான புதிர்களை விரும்புவோருக்கு ஏற்ற வகையில் உள்ள ரகசியங்களை அவிழ்த்து நகர்வதால் விறுவிறுப்புடன் உள்ளது. கதையைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள துாண்டுகிறது. அறிவியல், அரசியல், வரலாறு, மர்மங்கள் பின்னிப் பிணைந்து வசீகரிக்கும் நாவல் நுால்.
– வி.விஷ்வா