நகரமயமாதலால் அரசு சார்ந்த இடங்களில் வசிப்போரை இடம் பெயர வைப்பதால் ஏற்படும் அவலங்களை கூறும் நாவல். பல தலைமுறையாக ஒரே இடத்தில் வசிக்கும் ரங்கபுரம் மக்களை, அரசு அகற்ற திட்டமிடும்போது நடந்தவற்றை உரைக்கிறது.
மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வசதி கொடுத்து விட்டு, குடியிருப்புரிமை கொடுக்காத காரணத்தை கூறுகிறது. நில உரிமை யாருக்கு சொந்தம் என கேள்வி கேட்கிறது.
நகர குடியிருப்புரிமை பிரச்னையை துல்லியமாகக் கூறுகிறது. வீட்டு வேலை, சுமை துாக்குதல், துணி துவைப்பது, கழிவுநீர் அடைப்பை அகற்றுவது, குடிநீருக்கு குடத்துடன் அலைவது, குடிகார கணவருடன் போராட்டம், குழந்தைகள் எதிர்காலத்திற்காக உழைப்பது என, பெண்களை சுற்றியே கதை நகர்கிறது. உண்மைக்கு நெருக்கமாக படம் பிடித்து காட்டும் நாவல்.
– டி.எஸ்.ராயன்