சூட்சும சரீரத்துடன், நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தான் விரும்பும் வரை இருக்கக்கூடிய மகா அவதார் பாபாஜி குறித்த புத்தகம். பிரபல நடிகர் ரஜினிகாந்த் படித்து பாராட்டியது. பாபாஜியின் சித்து விளையாட்டு, பொன்மொழிகள், தரிசிக்கச் செல்லும் வழிகள் குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
புத்தகத்தை முழுமையாக படிக்கும் முன் சில தேன் துளிகள்:
* தன்னை நினைத்து, தனித்திருந்து ஜபமும் தபமும் செய்யும் அன்பர்களுக்கு அருட்காட்சி தந்து ஆட்கொண்டவர்
* பாபாஜி எந்த வடிவத்தில் எப்போது பக்தர்களுக்கு காட்சி தருவார் என்று சொல்ல முடியாது. சாதாரண மனிதத் தலையுடன் ஒருவருக்கு காட்சி அளித்தார். திடீரென மனிதத் தலை இருந்த இடத்தில் சிங்கத்தின் தலை தோன்றியது. தரிசனம் கிடைத்த பக்தர் அதிர்ந்துவிட்டார்
* கிரியா யோகம் என்பது மனித ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி, பிராண வாயுவின் மூலம் புத்துணர்ச்சி பெறச் செய்யும். இந்த அதிகப்படியான பிராண வாயுவின் அணுக்கள், உயிரோட்டமாக உருமாற்றப்பட்டு மூளை மற்றும் முதுகுத் தண்டின் மையங்களையும் புத்துணர்ச்சி பெறச் செய்கின்றன. அசுத்த ரத்தம் பெருகுவதை நிறுத்துவதன் மூலம் யோகியானவன் திசுக்களின் அழிவைக் குறைக்கவோ, தடுக்கவோ முடியும்.
பாபாஜியின் குகைக்குப் பயணிக்க இரண்டு வழித்தடங்கள் உள்ளன. ஒன்று டில்லி – காத்கோடம் ரயிலில் பயணித்து, கடைசி நிறுத்தமான காத்கோடத்தில் இறங்க வேண்டும்.
அங்கிருந்து ஜீப் போன்ற வாகனத்தை ஏற்பாடு செய்து, அல்மோரா வழியாக துவாராஹாட்டை அடையலாம். அல்மோராவில் இருந்து துவாராஹாட்டுக்கு 100 கி.மீ., தொலைவு. துவாராஹாட்டில் இருந்து குக்கூ சீனாவுக்கு 20 கி.மீ., தொலைவு.இன்னொரு தடமாக ரிஷிகேஷில் இருந்தும் போகலாம்.
நடிகர் ரஜினியின் ரசனைக்கு உகந்த பாபாஜியின் புத்தகம் பக்தர்களுக்கு வரப்பிரசாதம்.
– இளங்கோவன்