சம வாய்ப்பு பெற இயலாத ஏழை எளிய மக்களுக்கு வழிகாட்டியாக உயர்த்தப் பாடுபட்டவர் தான், கேரளாவில் அவதரித்த ஸ்ரீ நாராயண குரு.
ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம், மதம் எதுவானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும் என்ற மனிதத்தை முன்னிறுத்தி உபதேசித்த மனிதநேயவாதி. ஜாதி முறையில் எதையும் பேசாதே, கேளாதே என்பது இவரது திருவாக்கு. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அகிம்சை வழியில் நடத்திய போராட்டங்களும், அதனால் விளைந்த நன்மைகளும், மாற்றங்களும் பிரமிப்பூட்டும்.
ஸ்ரீ நாராயண குருவைப் பற்றி இதுவரை அறியப்படாமல் இருந்த பல உண்மைகளை, ஆசிரியர் ஆர்.வி.பதி வெளிச்சமிட்டு வெளி உலகிற்கு காட்டியுள்ள நுால்.
-– இளங்கோவன்