ஆன்மிகத்தின் உச்சத்தை எல்லாராலும் அடைய முடியாது. அந்த வினாடி ஏற்படுகிற பரவச உணர்வு பிரமிக்க வைக்கும்.
விஞ்ஞானிகளின் விபரீத அறிவின் முன், பழங்குடியின குழந்தைகளின் விவேக அறிவு வென்றதை படிக்கும் போது மனசுக்குள், ‘உபுண்ட்டு’ என சொல்லத் தோன்றுகிறது. அதென்ன என்றால், புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த கதைக்குள் தொலைந்து போவீர்கள்.
அறம் செய விரும்பு... ஆறுவது சினம் என முன்னோர் கற்றுத் தந்ததை சிறு சிறு கதைகளின் வாயிலாக விளக்குவது அருமை. இறைவனின் செருப்பாக பாவித்த ராமானுஜரின் பணிவை கண்டு வருந்திய மன்னன் என நீதி போதனை கதைகளாக மனதை நிறைத்து செல்கின்றன.
– எம்.எம்.ஜெ.,