சோழப் பேரரசில் மன்னன் ராஜராஜன், வரலாற்றுக்கு வழங்கியுள்ள ஆதாரங்கள் குறித்து விவரிக்கும் ஆய்வு நுால். வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள செப்பேடுகள் பற்றிய விபரங்களை விரிவாக பதிவு செய்துள்ளது.
சோழர் காலம் தமிழக வரலாற்றில் சிறப்புமிக்கதாக போற்றப்படுகிறது. அந்த வரலாற்றுக்கு உரிய ஆதாரங்கள், வெளிநாட்டு அருங்காட்சியங்களில் உள்ளன. அங்குள்ள ஆனைமங்கலம் செப்பேட்டை ஆராய்ந்து விரிவான தகவல்களை தருகிறது. செப்பேடுகள் எந்த காலத்தில், எதற்காக வெளியிடப்பட்டன; அவற்றின் வரலாற்று பின்னணி தகவல் விரிவாக தரப்பட்டுள்ளது.
சோழப் பேரரசின் வரலாற்று சுவடுகளை பின்தொடர்ந்து தேடிப் பிடித்து, விபரங்களை ஆராய்ந்து ஆதாரங்களை கண்டறிந்து, தமிழர் சிறப்பை வெளிப்படுத்தும் ஆய்வு நுால்.
– ராம்