திருமாலின் அவதாரங்களில் முதல் மூன்று குறித்து கூறும் நுால். எளிய தமிழில் புரியும்படி, கவிதை வடிவில் கதையோட்டம் உடையது.
திருமாலின் மச்ச அவதார கதையை பரிஷத் மன்னன் கேட்க, சுகதேவ் கோஸ்வாமி விளக்குவதாக ஹயக்கிரீவன் என்ற அரக்கனை வதம் செய்து வேதங்களை மீட்டு, உலகம் காத்த புகழைத் தருகிறது.
இரண்டாவதான கூர்ம அவதாரத்தில், திருப்பாற்-கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகால விஷம்; பின்னர் தோன்றிய பொருட்கள் அனைத்தையும் பட்டியலிட்டது. அசுரர்களை மாய்க்க மோகினி அவதாரம் எடுத்ததை கூறுகிறது.
மூன்றாவதாக வராக அவதாரத்தில், அரக்கர்களைக் கொன்று பூமியை கொம்புகளால் துாக்கியது கூறப்பட்டுள்ளது. பயனுள்ள ஆன்மிக நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து