எழுத்து, பேச்சு என சம்பந்தப்பட்ட அத்தனை துறைகளிலும் கோலோச்சிய, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். வாழ்க்கை போராட்டங்களுடன் அவரது இறுதி நிகழ்வு போராட்டமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில், அரசியல் தலைவர்கள் நல்லடக்கத்திற்கு இடமளிப்பது தவறு என்று வழக்கு தொடர்ந்திருந்தனர். கருணாநிதி இறந்ததில் இருந்தே விவாதம் துவங்கியது. மறுநாள் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது. பின், கருணாநிதி உடலுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த நிகழ்வு சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதியின் காண கிடைக்காத புகைப்படங்கள், கறுப்பு வெள்ளையிலும், வண்ணத்திலும் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. மறைந்த தலைவரின் வரலாறு பேசும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்