பாரதியின் பன்முக ஆற்றலை அறிஞர்களின் திறனாய்வுக் கருத்துகள் வழியே தொகுத்தும் வகைப்படுத்தியும் ஆராய்ந்துள்ள நுால். வாழ்க்கை வரலாறு, கவிதை, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், உரைநடைப் படைப்புகள், ஒப்பியல் ஆகிய தலைப்புகளில் திறனாய்வை வகைப்படுத்தியுள்ளது.
பாரதியார் படைப்புகளைத் திறனாய்வாளர்கள் எவ்வெவ்வகைகளில் பகுத்துள்ளனர் என்பதே அடிப்படை நோக்கமாகத் தெரிகிறது. பாரதி பற்றிய நுால்களைத் திரட்டியும், அறிஞர்களின் எண்ணங்களை எடுத்துக்காட்டியும் கண்ணோட்டம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பியல் நோக்கில் திறனாய்வு விரிவும் விளக்கமும் உடையது.
பாரதி படைப்புகளைப் புரிந்துகொள்ளவும், பன்முக ஆற்றலை அறிந்துகொள்ளவும் பெரிதும் உதவும். பாரதியை கொண்டாடும் நுால்.
– ராம.குருநாதன்