தற்போதைய சமூக கொடுமைகளில் ஒன்றான ஆணவக்கொலை பின்னணியை அலசி ஆராய்ந்துள்ள நுால். ஜாதியின் கொடூர முகம் ஆவணமாக பதிவாகியுள்ளது.
ஜாதியின் பெயரால் உற்றார், உறவினர்களால் நிகழ்த்தப்பட்ட கொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், செயலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஜாதி சார்ந்த வெறி எப்படி சமூகத்தில் ஊடுருவி வேர் பிடித்தது என்பதை விளக்கமாக சொல்கிறது.
கொடூர நிகழ்வுகளுக்கு உரிய ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வெறிக்கு பலியானோர் குடும்ப பின்னணி, வாழ்விடத்தில் நிலவிய அரசியல், சமூக, பொருளாதார நிலை என பல்வேறு நிலைகளில் ஆய்வுப்பூர்வமாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. சம காலத்தில் நிலவும் சமூக அவலத்தை ஆராய்ந்து, உறுதியான கருத்தை முன் வைக்கும் நுால்.
– ராம்