தங்கம் விளைந்த பகுதியில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலையை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தங்கக் கூட இடமின்றி தவிக்கும் அவலத்தை தத்துரூபமாக எடுத்துக்காட்டுகின்றன. சமூக சூழலை சுட்டிக்காட்டி சாடுகின்றன.
இப்படியும் இருக்குமா என்று நினைக்கும் முன்பே, இப்படியும் நடக்கின்றன என ஏழை மக்களின் துயரத்தை விவரித்து கண்ணில் நீர் வரச் செய்கிறது. அதேசமயம், நகைச்சுவையும் உண்டு. வருமானம் ஈட்டும் இளம் பெண்ணின் அகந்தையை நுட்பமாக விரட்டுகிறது ஒரு கதை. சமூக அவலத்தை புரிய வைக்கும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்