இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றின் இறுதியிலும் ஒரு சுவாரசியத்தை வைத்துள்ளது புது முயற்சியாக உள்ளது.
கதைகளின் முடிவு எதிர்பார்ப்பது போல் இல்லாமல், வேறு விதமாக உள்ளன. முதல் கதையாக, ‘மாய வாழ்க்கை’ மலர்ந்துள்ளது. வாழ்க்கை பாதையை யார் யார் எப்படி அமைத்துக் கொள்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. யார் யாருக்கு எப்படி சாப்பிட்டால் திருப்தி என்பதை, ‘சாப்பாடு’ கதையில் சுவாரசியமாகக் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக உள்ள, ‘பாசம்’ கதையில் தங்கை இறந்த நிலையில், அவள் மகனை வளர்த்து வரும் பெண், இறுதியில் எப்படிப்பட்ட வருத்தத்தை சந்திக்கிறாள் என்பதை சொல்கிறது. அழகிய வர்ணனையுடன் வாழ்க்கை நிகழ்வுகளை பல கோணங்களில் அலசும் அருமையான நுால்.
– முகில்குமரன்