ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய நாவல் நுால். பலதரப்பட்ட சமூகத்தில் வாழுவோரை கதா பாத்திரங்களாக உடையது. சமூகங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.
தொடர் சம்பவங்களின் அடிப்படையில், ஆறு கதாப்பாத்திரங்களை மையமாகக் கொண்டுள்ளது. வாழ்வில் ஏற்படும் துயரங்கள் விளக்குகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளை கூறுகிறது. சூழ்நிலையால் ஏற்படும் தவறு பற்றி விவரிக்கிறது.
தவறுகள் திருத்தப்பட்ட வாழ்க்கை முறையோடு கதை ஓட்டம் முடிகிறது. எளிய ஆங்கிலச் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலை துாண்டுகிறது. ஆங்கில மொழியில் எழுதுவோர்க்கும், மொழிபெயர்ப்புப் பணி செய்வோர்க்கும் பெரிதும் உதவும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்