அயோத்தி ராமஜென்ம பூமியை விளக்கும் நுால். கி.பி., 1528 முதல், 2019 வரையிலான வரலாறு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பின் பக்தர்களின் போராட்டங்கள் குறித்து விளக்கமாக தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம், பாரத மொழிகளில் ராமாயணம் வந்துள்ளது, ராமரின் பாதம் பதிவான 214 இடங்கள், ராமாயணம் உலக நாடுகளில் பரவியது பற்றிய செய்திகள் உள்ளன.
ராமஜென்ம பூமி மீண்டும் ஹிந்துக்களுக்கு கிடைக்க காரணமாக இருந்த கே.கே.நாயரின் துணிச்சல், போராட்டம் நடத்திய விஸ்வ ஹிந்து பரிஷத் குறித்த விபரங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இறுதியாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரம் உள்ளது.
– முனைவர் கலியன் சம்பத்து