துப்பறியும் பாணியில் விறுவிறுப்பான நாவல். சமூக விரோதிகள் பொது வாழ்வில் இருப்போருடன் தகாத செயலில் ஈடுபடுவதை எடுத்துரைக்கிறது.
காவல் துறையில் பணியாற்றுபவர், மனைவி கொலை செய்யப்படும் சூழலில் கூட பணியிலிருந்து செல்ல முடியாத நிலையை உணர்த்துகிறது. அவரது கடமை உணர்ச்சியால் ஏற்பட்ட அவலத்தை பதிவு செய்கிறது. கொலைகளை செய்த ரவுடி எப்படி தப்பிப் போகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது.
அரசியல் போர்வையில், நேர்மையாகத் தொழில் செய்வோரை மிரட்டி, பணம் பறிப்பதை எடுத்துரைக்கிறது. சமூக விரோதிகளை நீதிபதி எதிர்த்து நின்று நீதியை நிலைநாட்டுவதை மனதில் பதிய வைக்கிறது. அச்சம் ஏற்படும் வகையில் திருப்பங்களை தருகிறது. நிகழ்ச்சிகளின் வழியே பயணிக்கச் செய்யும் நாவல்.
– முகிலை ராசபாண்டியன்