திருநெல்வேலி வட்டார வழக்கில்எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனித குணங்கள், நற்பண்புகள், கலாசார நடவடிக்கைகளை மையமாக வைத்து அமைந்துள்ளன.
இளமைப் பருவத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மூதாட்டிக்கு கண் பார்வை பறிபோகிறது. சோர்ந்து போகாமல் குழந்தைகளுடன் தாயக்கட்டை விளையாடி, படிப்பு தான் வாழ்க்கை என அறிவுரை கூறுகிறார். இதை விவரிக்கும் ‘விருத்தம்’ கதை, வீடுகளுக்கு பாட்டி தேவைப்படுவதை வலியுறுத்துகிறது.
‘எங்கே செல்லும் இந்த பாதை’ கதை, பணத்தாசையை சாடுகிறது. குடும்பத்தில் சொத்து, பிரிவுக்கு காரணமாகி, பிறரிடம் கையேந்த வைப்பதை, ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கதை’ கூறுகிறது.
– -டி.எஸ்.ராயன்