அமானுஷ்ய உணர்வு தரும் வகையில் படைக்கப்பட்ட நாவல் நுால்.
கடவுள் நம்பிக்கை இல்லாத பாஸ்கர், இயற்கையை மிகவும் நேசிக்கிறார். ஆவி உலக ஆராய்ச்சி செய்பவர் பவித்ரா. ஒரே கல்லுாரியில் படித்து, காதலித்து திருமணம் செய்கின்றனர். கொடைக்கானல் செல்லும் போது இயற்கை அழகை, மனைவியிடம் வர்ணிக்கிறார்.
ஒரு பங்களாவில் தங்குகின்றனர். நள்ளிரவில் அமானுஷ்ய குரல்கள் ஒலிக்கின்றன. ஆவி, பேய், பிசாசு ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். அது அலறல் ஏற்படுத்துகிறது. சமையல் செய்யும் பெண்ணிடம் கேட்ட போது அச்சம் கலந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விடுகிறார். திடீரென காணாமல் போகிறார் பெண். இப்படி திகிலுாட்டுகிறது நாவல். பேய் பிடிக்க வைக்கும் பிசாசு கதை.
-– -டி.எஸ்.ராயன்