அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால். அது தத்துவமாகக் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை தேர்ந்தெடுப்பது தான் என்றாலும், இயல்புக்கு மாறான செயலில் வழி தவறிய இளைஞனைக் காப்பாற்றி, புகழையும் தரும் இறைவியின் கருணையில் மனம் உருகும். நடிகை, நடிகன், பெரிய தொழிலதிபர் என்று பணமும் புகழும் இருந்தாலும், மன நிறைவு அன்பிலே அடங்கியுள்ளது என்ற பாடத்தை முன்வைக்கிறது.
செயல்களை அசை போடும் போது துன்பங்களுக்கான காரணங்கள், பரிகாரங்களை அறிந்துகொள்ள முடியும் என தெளிவுபடுத்துகிறது. காயப்படுத்திவிட்டு காளியின் பாதங்களில் அபிஷேகம் செய்வது பக்தியல்ல என்ற உண்மையை உணர்த்தும் நுால்.
--– தி.க.நேத்ரா