சமுதாயத்தில் பெண்களுக்கு அநீதியாக இருந்த, தேவதாசி முறை ஒழிப்பு பற்றிய விபரங்களை எடுத்துரைக்கும் நுால். இதற்காக அரும்பாடுபட்ட அயல்நாட்டு பெண்ணின் உழைப்பின் சிறப்பை தொகுத்துள்ளது.
இந்த புத்தகம், ஏழு இயல்களாக பகுக்கப்பட்டுள்ளது. பெண்ணும் அடிமைத்தனமும் என்பதில் துவங்குகிறது. அது தொடர்பான தகவல்களை திரட்டி தருகிறது. தொடர்ந்து தேவதாசி முறை, விடுதலைப் போர் என செய்திகளை தருகிறது.
அடுத்து, அயல்நாட்டில் இருந்து சேவை செய்ய வந்த ஏமிகார் மைக்கேலின் துணிச்சல் பற்றி விவரிக்கிறது. நெல்லை டோனாவூர் பகுதியில் முகாம் அமைத்து சேவை செய்தது, பெண்கள் விடுதலைக்காக பாடுபட்ட விபரங்களை ஆவணச்சுவடுகளுடன் தரும் நுால்.
– ராம்