நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்றை வசன கவிதையில் வர்ணிக்கும் நுால். இளமையில் வறுமை, ஆன்மிக ஈடுபாடு, நடத்துனர் வேலை பறிபோனது, சினிமா வாய்ப்புக்கு அலைந்தது, தமிழ் கற்றது என அனைத்தும் ஒளிவு மறைவின்றி உரைக்கிறது.
மூன்று முடிச்சு படத்தில் எதிர்மறையாக நடித்தது, சூப்பர் ஸ்டாராக வலம் வந்தது, உழைப்பாளி படத்திற்கு ஏற்பட்ட தடைகள் என நிகழ்வுகளை அடுக்குகிறது. ரஜினி வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் படக்காட்சியாக விவரிக்கிறது.
சிவாஜி, எந்திரன், சந்திரமுகி போன்ற படங்கள் பெற்ற வெற்றி, விருதுகளை குவித்தது என விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு சாமானியன் புகழின் உச்சத்திற்கு சென்ற வரலாற்றை விவரிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்