இந்திய வரலாற்றில், கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையை விவரிக்கும் நுால். அரசியல், இனம், கலாசார சிக்கல்களை, 18 தலைப்புகள் வழியாக பேசுகிறது.
மக்களின் சுதந்திர போராட்டத்தை துாண்டிய காரணிகளை விளக்குகிறது. வங்கதேசம் தனிநாடாக உருவாகக் காரணமான அரசியல் நிகழ்வுகளை சொல்கிறது. இதற்காக தோன்றிய இயக்கங்கள், அவை எடுத்த நடவடிக்கைகளை கூறுகிறது.
இதில், இந்தியாவின் பங்கை ஆய்வுப்பூர்வமாக அலசுகிறது. வங்கதேசம் உருவாக்கம், எல்லை வரையறை, மக்கள் தொகை, மதக்குழுக்கள், ராணுவ சட்டம், பத்திரிகைகள், திரையரங்குகள் குறித்து பட்டியலிடுகிறது.
உயிர்பலிகள், உடமை இழப்புகள், அகதிகளாக இடம் பெயர்தல் என, மக்கள் துயரங்களை கண்முன் நிறுத்துகிறது. உலகில் அமைதி மலர வலியுறுத்தும் நுால்.
--– -டி.எஸ்.ராயன்