நெறி பிறழாது வாழ்ந்தாலே போதும், மோட்சம் வந்தே தீரும். வள்ளுவனை காட்டிலும் துல்லியமாக யாரும் சொன்னதில்லை. அதனால் தான், உலகப் பொதுமறை என்ற பெருமை கொண்டது திருக்குறள்.
காதல் வசப்பட்டவர்களுக்கு இன்பத்துப்பாலின் பொருள் புலனாகும். அது அனுபவத்தின் வெளிப்பாடாகும். சந்திரன் ஒளிக்கும் தலைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாமல், விண்மீன்களே கலங்கி நிற்கின்றனவாம். தாபத்தில் தவிக்கும் தலைவனின் கோபக் கேள்வியை பாருங்கள் சந்திரனே, என் தலைவியின் முகம் போல் ஒளி வீச முடியுமா என்பது மோகத்தின் உச்சம். உண்மை காதலின் உயர்வை இலக்கிய நயத்துடன் தரும் நுால்.
– டாக்டர் கார் முகிலோன்