கல்வெட்டு ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். பாண்டிய நாட்டிற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் வாழ்வோரை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்ட வீரபாண்டியன் போர் நுணுக்கம், ஆட்சி சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
மலை காட்டில் வாழும் மக்கள், வில்லாற்றலால் வெல்லும் தன்மை கொண்டவர்கள் என்பதை காட்டியுள்ளது. ஒரு மன்னனின் வரலாற்றை சொல்வது போல் தோன்றினாலும், கதை சொல்லும் தன்மையிலும், மொழியிலும் புதுமையாக அமைந்துள்ளது. மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிப்படுத்தும் நாவல்.
– முகிலை ராசபாண்டியன்