முதுகெலும்பு இல்லாத தகப்பனார் முதலில் மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அவர்கள் நன்கு பழகி காதல் அரும்பிய பின், முட்டுக்கட்டை போடுகிறார் தாய். சின்னத்திரை வில்லி மாதிரி குணம்.
இப்படி ஒன்பது ஆண்டு காதல் முடிவிற்கு வருவதைத் தெரிவிக்கிறது. அதற்குக் காரணம் ஜாதி ஏற்றத்தாழ்வு, அந்தஸ்து என்பதாக உள்ளது. கல்வியில் பேதம் இல்லாத போதும், ஜாதி ஆணவம் இளம் குருத்துகளை முறித்துப் போடுவதை விவரிக்கிறது.
உறவினர், நட்பு வட்டாரம் என பாத்திரங்கள் கூற்றாக கதை நகர்வது வித்தியாசமான ஒன்று. ஒரே மையக்கருத்தாக செல்வதால், அத்தனை பேர் சொல்வதும் புரிகிறது. ஜாதியை ஒதுக்கி வைத்து இளைஞர்களை வாழ வைக்க சமுதாயத்துக்கு யோசனை சொல்லும் நாவல் நுால்.
– சீத்தலைச் சாத்தன்