பணம் என்ற நாணயம் தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். மதிப்பு மிக்கதாக உலகம் முழுதும் போற்றப்படுவது குறித்த விபரங்களை எளிய நடையில் விவரிக்கிறது.
நாணயத்தின் பரிணாமங்கள், பண்டைய நாணயங்கள், இந்தியாவில் ஐரோப்பிய நாணயங்கள், முகலாயர் நாணயங்கள், தமிழகத்தில் நாணயங்கள், குறுநில மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், பண நிர்வாகம் உட்பட 10 தலைப்புகளில் செய்திகளை சொல்கிறது.
உலகம் முழுதும் நடக்கும் தொல்லியல் மற்றும் புதை பொருள் ஆய்வுகளில் ஏராளமான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் வழியாக வரலாற்றில் பொதிந்துள்ள உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அந்த நாணயத்தின் சுருக்கமான வரலாற்றை தெளிவாக உரைக்கிறது. பண வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் நுால்.
– மதி