ஜாதியம், பெண்ணியப் பிரச்னைகளை நாடகம் வழியாக பேசும் நுால்.
கல்வெட்டு குறிப்பை அடிப்படை கருவாகக் கொண்ட கதை. கிராமத்தில் ஓடாத தேர் ஓடுவதற்காக, தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் பலியிடப்படுகிறார். இச்செய்தியை அடிப்படையாகக் கொண்ட நாடகம், தமிழகத்தில் பல மேடைகளில் அரங்கேற்றப்பட்டுள்ளது. சாமியாடி நரபலி குறித்து பேசுவதும், உடுமன் என்பவரை பலியிட முடிவு செய்வதும், அவர் மனைவி கதறுவதும், திருநங்கை அவரை தப்பிக்க வைப்பதை படபடப்புடன் விவரிக்கிறது.
உடல் உழைப்போரை காட்டுமிராண்டிகளாக சித்தரிப்பதை கவலையுடன் சொல்கிறது. அழுக்கை சுத்தப்படுத்துபவனை, இந்த சமூகத்தில் எப்போதும் அழுக்காக பார்ப்பதை மன அழுக்கு என்கிறது. தமிழகத்தில் சில பகுதிகளை வெளிச்சம் போட்டு காட்டும் நுால்.
– -டி.எஸ்.ராயன்