புகழ் பெற்று விளங்கிய நாலந்தா பல்கலைக் கழகம் குறித்த ஆய்வு நுால். வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள் கருத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
பவுத்த நுால்கள், சீனப்பயணி யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்புகள், ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகள், இஸ்லாமிய ஆவணங்கள் துணையுடன் கூர்ந்து நோக்கி ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. ஒரு பொக்கிஷமாக தொகுக்கப்பட்டுள்ளது.
எந்த மன்னர் ஆட்சிக் காலத்தில் எந்தக் கட்டடம் கட்டப்பட்டது, அங்கிருந்த பவுத்த துறவியர் யார்? அவர்களின் சீடர்கள் மற்றும் கல்வி பெற தங்கியிருந்த மாணவர்கள் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. கற்றுத்தந்த பாடங்கள், எந்ெதந்த நாட்டினர் தங்கியிருந்தனர் என்பதை எளிய நடையில் தரும் நுால்.
– ஒளி