இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை வெளிப்பாடாக அமைந்திருக்கும் நுால். இந்திய பண்பாட்டுத் தாக்கத்தை எடுத்துரைக்கிறது.
சீனாவின் தாக்கம் இந்தியாவில் ஏற்படவில்லை. மாறாக வணிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பிரச்னையில் அறிந்தோ, அறியாமலோ அமெரிக்காவும் பங்கு செலுத்தியுள்ளது. இந்த தலையீடு இந்தியாவுக்கு மறைமுக ஆதரவாக அமைந்துள்ள உண்மையை அறியத் தருகிறது.
டிராகனை, சீன குறியீடாகக் காட்டியிருப்பதும், நிழற்படங்களை அமைத்திருப்பதும் ஆர்வம் சேர்க்கின்றன. அணு ஆயுதம் தொடர்பாக ஐன்ஸ்டீன் வெளியிட்ட கருத்து புத்தக தலைப்பாக அமைந்திருக்கிறது. அணு ஆயுதப் போருக்கு எதிராக எதிர்கால உண்மையை உணர்த்தும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்