பள்ளி பருவ காலங்களை அசை போட வைக்கும் நாவல். உணர்வுகளுடன் நகர்கிறது.
தாய் கொடுக்கும் செல்லம், தந்தையின் கண்டிப்பு அன்பு, பொறுப்புணர்வு உணர்ந்து, பிள்ளைகளை வாழச் சொல்கிறது. விடுதி வாழ்க்கையின் மனித குணாதிசயங்களை பகிர்கிறது. கதாபாத்திரங்கள், மண்ணின் மணத்துடன் நெருங்குகிறது.
மாணவ பருவத்தின் இயல்பான குணங்களை பேசுகிறது. கிராம திருவிழா, பண்டிகையை கலவரப்படுத்தாமல் மனமகிழ்வாக சொல்கிறது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் உலவும் வட்டார வழக்கு சொற்கள், நாவல் முழுதும் இயல்பாக அமைந்துள்ளன. வாசிப்போரை, கதாபாத்திரத்தோடு இணைத்து வைக்கும் நாவல் நுால்.
– டி.எஸ்.ராயன்