அறிவியலும் ஆன்மிகமும் முரணானவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. மதங்களும், வழிபாட்டு முறைகளும் கடவுள் ஒருவரே என்கின்றன. கடவுள் அருள் பெற அனைத்து உயிரினங்களிடமும் அருள் செலுத்தி, மனித நேயத்தோடு வாழ வலியுறுத்துகிறது இந்த நுால்.
ஆன்மிகத்தையும், அறிவியலையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் திருவள்ளுவருக்கு உடன்பாடு இருக்கிறது என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறது. பூமி தோன்றிய வரலாற்றில் துவங்கி, கடவுள் படைப்பில் நால் வகை தோற்றத்தைக் கண்முன் நிறுத்துகிறது.
எழு வகை பிறப்பை எடுத்துக் கூறுகிறது. மகான்களை பற்றி மாண்பு குன்றாது எழுதப்பட்ட நுால்.
– முனைவர் வி.ஜி.சந்தோசம்