நான்கு குடும்ப வம்சங்கள், 310 ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசு கட்டமைக்கப்பட்ட வரலாற்றை விரிவாக விளக்கும் நுால்.
வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி கண்டறிந்த ஆதாரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கி.பி., 1336 முதல், 1646 வரை ஆட்சி செய்த ஹரிஹரன், புக்கர், கம்பண்ணன், இரண்டாம் ஹரிஹரன், இரண்டாம் புக்கர், சாளுவ நரசிம்மன், நரசிம்ஹராயர், கிருஷ்ண தேவராயர், அச்சுத ராயன், சதாசிவ ராயன், ராம ராயர், ரங்கன் ஆட்சி செய்தது விரித்துரைக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு வம்சத்தவரும் விஜயநகர பேரரசு என்ற பெயரில் ஒரே கொள்கை, கலாசாரத்தை பின்பற்றியதை விவரிக்கிறது. விஜயநகரப் பேரரசை அறிய விரும்பும் ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவும் நுால்.
–- புலவர் சு.மதியழகன்