தெரிந்த அறிஞர்கள் பற்றிய தெரியாத செய்திகளையும், தெரியாத அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் நுால். சமூகநலத் தொண்டர்களின் பணியைத் தேடிக் கண்டறிந்து வெளிக்காட்டியுள்ளது.
இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், அரசியலில் துாய்மையாளர் கக்கன் எனப் பலரது வாழ்க்கையையும், அவர்களைப் பற்றிய மதிப்பீட்டையும் எடுத்துரைக்கிறது. கோவை சுற்றுப்பகுதியில் பலரின் தன்னலமற்ற தொண்டு வெளிப்பட்டுள்ளது.
வள்ளலார், வ.உ.சி., போன்றோரின் வாழ்க்கையை புதிய கோணத்தில் அலசுகிறது. அறத்துடன் மேற்கொண்ட வாழ்க்கையாகக் காட்டியிருப்பதும் சிறப்பாக உள்ளது. காலத்தை கனிய வைத்த மாமனிதர்கள் வரலாற்றை பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களை அறிமுகம் செய்யும் புத்தகம்.
– முகிலை ராசபாண்டியன்