ஒவ்வொரு நாள் துவங்கும்போதும், புனிதமான- தெய்வீக- எண்ணங்களைத் தியானித்தால், வாழ்வில் மேன்மை அடையலாம் என்று கூறும் நுால். மன உலகில் ஆன்மிக வலிமை, அதன் வளர்ச்சிப் பாதை, தெய்வீக வாழ்க்கை அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.
மனவலிமை, ஆளுமை, முன்னேற்றத்தை விளக்கி பேரின்ப நிலையைக் கூறுகிறது. அடிப்படைத் தேவை, வளர்ச்சி நோக்கங்கள், எல்லையற்ற பரம்பொருளை நோக்கிச் செல்லத் துாண்டும் உள்ளத்தின் இயல்புகளை விவரிக்கிறது.
ஆன்மிக வழிகாட்டுதல், பக்தியின் சக்தி, தெய்வீக இருப்பின் சான்று, வேதாந்தத்தின் ஒழுங்கு முறை விளக்கப்பட்டுள்ளது. படித்துப் பாராயணம் செய்ய உதவும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து