சுத்த சன்மார்க்க இயக்க நெறியாளர் வள்ளலார் வாழ்க்கை, ஆன்மிக நெறிகளை விவரிக்கும் நுால். சமரச சன்மார்க்கப் பேரியக்கத்தைத் தோற்றுவித்து, பேதமற்ற சமுதாயத்தை நோக்கிய கோட்பாடுகள் பற்றியும் எளிய நடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வள்ளலாரின் பிறப்பு துவங்கி, இளமையில் தந்தையை இழந்து இடம் பெயர்ந்தும் கந்தகோட்டத்தின் மீது ஈர்ப்பு கொண்டதையும் புலமை பெருக்கெடுத்துப் பாடல் பொழிந்ததையும் எடுத்துக்கூறுகிறது.
வள்ளலாரின் புறத்தோற்றம், இயல்புகள், உயிரினங்கள் மீது இரக்க குணம், அவரது குரு, சென்னையிலும், வடலுாரிலும் வாழ்க்கை செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளது. வள்ளலார் படைப்பின் தனித்தன்மையை விளக்கும் நுால்.
-– -கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு