பழந்தமிழ் இலக்கியங்களில் சுவையான காதல் களங்களை உள்ளடக்கிய குறுந்தொகை பாடல்களை தேர்ந்தெடுத்து சுற்றித் தொடுத்த கதை நுால்.
கதை நாயகன், நாயகி, தோழி என கற்பனை கதைமாந்தர்களை படைத்து, பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.
தலைவனின் காதல் வேட்கை, தலைவியின் மறுப்பு, ஏமாற்றம், தோழியின் அறிவுரை, தலைவி ஒப்புதல், ஆற்றாமை, தோழி தேற்றுதல், தலைவன் பிரிவு, பிரிவுத் துயரம் என்று தொய்வில்லாமல் செல்கிறது. பேச்சு நடையிலே அமைந்துள்ளது. தற்கால சூழலை உருவாக்கம் செய்யப்பட்ட நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு