பொதுவுடைமை வாழ்க்கை செயல்பாடுகளை அறிமுகம் செய்யும் வகையிலான நுால். தெலுங்கானாவில் சுந்தரய்யா துவங்கி, மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு வரை 10 தலைவர்கள் பற்றிய சுருக்க குறிப்புகள் உள்ளன.
நாட்டின் உயர்வுக்காக பொதுவுடைமை தத்துவத்தை வாழ்வில் ஏற்ற சூழலைச் சொல்கிறது. ஒவ்வொரு தலைவரும் தனித்துவத்துடன் செயல்பட்டது, மக்கள் போராட்டங்களில் பங்கேற்றது, செயல் உறுதித்தன்மை என பல அம்சங்களை கவனம் செலுத்தி தகவல்கள் தரப்பட்டுள்ளன.
போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள், பெற்ற துன்பங்கள், சிறை அனுபவ விபரங்கள் உள்ளன. தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடித்த ஒழுக்கம், தியாகம் நிறைந்த செயல்பாடுகளை விவரிக்கிறது. தனித்தன்மையுள்ள தலைவர்களின் செயல்களை சுருக்கமாக அறிமுகம் செய்யும் நுால்.
– மதி