இறைவன் மனிதன் மீது கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை, அன்பை மிக எளிமையாக உரைக்கும் நுால். சிறு சிறு கதை வடிவில் ஆங்கிலத்தில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால்.
இந்தப் புத்தகத்தில் உள்ள 45 கதைகளுமே மானிடர்களின் காதலைச் சொல்லவில்லை; மனித இனத்தையே காதலிக்கும் அந்த இறைவனின் அழியாத, என்றும் மாறாத காதலையே கனிந்துருகி சொல்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு இந்தக் கதைகள், வளர்ச்சிக்கு உரிய ஆன்மிகப் போஷாக்கை தரும்.
வளர்ந்த பக்தர்களின் ஆன்மிகப் பயணத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஒளிரும். இது, இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம். மனிதர்களின் ஆழ்மனதில் நிறைந்திருக்கும் நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கும் நுால்.
– ராம்