முகப்பு » கதைகள் » அம்மாகிட்ட உண்மையே

அம்மாகிட்ட உண்மையே சொல்லிடலாம்ப்பா

விலைரூ.80

ஆசிரியர் : ஜெ.சங்கரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முத்தான சிறுகதைகள் பத்து உள்ள தொகுப்பு நுால். கதை மாந்தர்களின் உண்மை உணர்ந்து பாத்திரத்துக்கு உயிரோட்டம் தந்துள்ளது உள்ளத்தில் பதியும் வண்ணம் உள்ளது. உணர்ச்சிப் பெருக்கான நடை கவர்கிறது.

மகளிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்ற தாய் விதிவசத்தால் ஒன்றிணைகிறாள் என்பதை விறுவிறு நடையில் கொண்டு செல்கிறது. அன்பான கணவனை ஆட்டிப்படைக்க நினைத்த மனைவி எப்படி அடங்கிப் போகிறாள் என்பதனை ஒரு சிறுகதை உருகி சொல்கிறது.

மற்றொரு கதை, ஏழைகளை ஏமாற்றக்கூடாது என்பதை யதார்த்த நடையில் போதனையாய் அமைகிறது. கதையின் முடிவுகள், கச்சிதமாக உள்ளன. நல்ல சிறுகதைகளை படித்த மன உணர்வு நிச்சயம் ஏற்படும். அருமையான கதைகளின் தொகுப்பு நுால்.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us