மறைஞானசம்பந்தர் படைத்த 613 விருத்தப்பாக்களை உடைய நுால் தெளிவுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.
திருமால் – பிரம்மன் இடையே சண்டை ஏற்பட்டது. அதில் யாரும் தோல்வி அடையவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனால் தேவர்கள் கவலை அடைந்தனர். சண்டையை நிறுத்த சிவபெருமானை வேண்டினர்.
அவர் அடி முடி காண இயலாத அனல் வடிவில் தோன்றினார். இந்த அனலின் தொடக்கத்தையும், முடிவையும் கண்டவரே வென்றவர் என்று மாயக்குரல் சொன்னது. இருவராலும் அது இயலவில்லை என்ற புராணத்துடன் தொடர்கிறது.
சைவம், பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டோர் புரியும் வகையில் தரமான கட்டமைப்புடன் உள்ளது. உரையுடன் படிக்க விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்த நுால்.
– முகிலை ராசபாண்டியன்