வித்தியாசமாக நோய்களை அணுகி,தீர்வுக்கு வழிகாட்டும் நுால். தொழில்வாரியாக பகுப்பாய்வு செய்து தடுப்பு முறைகளை கூறுகிறது.
பணியால் ஏற்படும் பிணிகளை விளக்கி தீர்வு சொல்கிறது. விவசாயத்தில் துவங்கி, அணுமின் நிலையங்கள், விலங்கினங்கள், சினிமா துறை, அழகுக்கலை, சுவர்களுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்வோர் வரை, தொழில் சார்ந்த பிணிகளை முறை செய்கிறது. அது ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை விவரிக்கிறது.
பணித்தளத்தில் ஏற்படும் மன அழுத்தம் மட்டுமின்றி, அதைச்செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. நவீன வாழ்க்கை முறையில் ஏற்படும் அணுகுமுறை சிக்கல்களில் இருந்து விடுபடும் வழிகளை வகுத்துக் கூறுகிறது. புதிய அணுகுமுறையிலான மருத்துவ நுால்.
– ஒளி