சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தனி மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை பற்றிய நாவல்.
கிராமத்தில் பிறந்து சென்னை யில் பணிகளை கடமை தவறாது செய்கிறார் வளவன். நண்பராக அறிமுகமான நகுலன், தன் மகள் லட்சுமியை மணமுடிக்க விரும்புகிறார். மனைவி எதிர்வினையாற்றுகிறார். லட்சுமி யார் பேச்சை கேட்பது என இறுக்கத்தில் இருக்கிறார்.
மன உறுதியோடு வாழ்க்கையை தொடர்கிறார் வளவன். நகுலனுக்கு குடும்பத்தினருடன் தீர்க்கமாக பேச முடியாத நிலை. திருமணம் அரங்கேறியதா என நாவல் விடை சொல்கிறது. ஜாதி, படிப்பு, வசதியால் காதலுக்கு ஏற்படும் பிரச்னையை பகிர்கிறது. ஓரளவு முன்னேறிய, கல்வியறிவு பெற்ற குடும்பங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்