இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் கருத்துக்களை தாங்கி நிற்பதோடு, அறம் கூறலும் வெளிப்படுகிறது.
புத்தகங்கள் அறிவுப் பசியை மட்டுமல்ல; குழந்தையின் வயிற்றுப் பசியையும் எப்படி போக்கியது என்பதை, ‘புதிய சொர்க்கம்’ சொல்கிறது. அலைபேசி பயன்பாடு முதல், கோலம் வரை, இளைய தலைமுறை வாழ்வு, குடும்ப சிக்கல் என அனைத்தையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளன.
மனிதன் காலத்தாலும், சூழ்நிலைகளாலும் எவ்வாறு மாறுகிறான் என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது. சிறிய சிறிய சம்பவங்களை கொண்டும், கதாபாத்திரங்களுக்கு உடனிருக்கும் நண்பர்களின் பெயர்களை சூட்டியிருப்பதும் புதுமையாக இருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் சராசரி மனிதர்களின் இருப்பை கண் முன் நிறுத்துகிறது.
– ஊஞ்சல் பிரபு